Bible Language

Ezekiel 21:10 (YLT) Young's Literal Translation

Versions

TOV   மகா சங்காரஞ்செய்வதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாய் அது துலக்கப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என் குமாரனுடைய கோல், அது சகல விருட்சங்களையும் அலட்சியம்பண்ணும்.
IRVTA   பெரிய அழிவுண்டாக்குவதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாக அது தீட்டப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என்னுடைய மகனுடைய கோல், அது எல்லா மரங்களையும் அலட்சியம்செய்யும்.
ERVTA   வாள் கொல்வதற்காகக் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது இது மின்னலைப்போன்று பளிச்சிட கூர்மையாக்கப்பட்டிருக்கிறது. ‘"என் மகனே, நான் உன்னைத் தண்டிக்க வரும் பிரம்பிடமிருந்து ஓடிவிட்டாய். அம்மரத்தடியால் தண்டிக்கப்படுவதற்கு நீ மறுக்கிறாய்.
RCTA   படுகொலைக்காக அது கூர்மையாக்கப்பட்டது, மின்னுவதற்கெனத் துலக்கப்பட்டுள்ளது! அது நமக்கு மகிழ்ச்சி தருவதா?அது என் மகனைத் திருத்தும் கோல், அதற்குமுன் நிற்கும் மரம் எதுவுமில்லை.
ECTA   படுகொலை செய்வதற்கென அது கூர்மையாக்கப்பட்டுள்ளது! மின்னலென ஒளிர்வதற்கென அது துலக்கப்பட்டுள்ளது! நாம் மகிழ்ச்சி கொள்வோமா? ஏனெனில், என் மக்கள் எல்லா எச்சரிக்கைகளையும் தண்டனைகளையும் புறக்கணித்து விட்டனர்.