Versions
TOV சகல ஜாதிகளும் ஏகமாய்ச் சேர்ந்துகொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு மெய்யென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து யதார்த்தவான்களாய் விளங்கட்டும்.
IRVTA சகல தேசங்களும் ஏகமாகச் சேர்ந்துகொண்டு, சகல மக்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு உண்மையென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து நேர்மையானவர்களாக விளங்கட்டும்.
ERVTA அனைத்து ஜனங்களும் அனைத்து நாடுகளும் ஒன்றுசேர வேண்டும். அவர்களது பொய்த் தெய்வங்களில் ஒன்று தொடக்கத்தில் என்ன நடந்தது என்பதைச் சொல்லட்டும். அவர்கள் தங்கள் சாட்சிகளை அழைத்து வரட்டும். சாட்சிகள் உண்மையைப் பேச வேண்டும். அவர்கள் சரியானவர்கள் என்பதை இது காட்டும்.
RCTA மக்களினங்கள் யாவும் ஒன்று கூடட்டும், எல்லா இனத்தவரும் ஒன்று சேரட்டும்; அவர்களுள் யார் இதை அறிவிக்கக்கூடும்? முன்னைய காரியங்களை நமக்கு அறியச் செய்யமுடியும்? அவர்கள் காட்சிகளைக் கொண்டு வந்து மெய்ப்பிக்கட்டும், அதைக் கேட்டு, மக்கள் 'உண்மை' எனச் சொல்லட்டுமே.
ECTA வேற்றினத்தார் அனைவரும் ஒருங்கே திரண்டு வரட்டும்; மக்களினங்கள் ஒன்று கூடட்டும்; அவர்களுள் யார் அதை முன்னறிவிக்கக்கூடும்? முன்பு நடந்தவற்றை யாரால் விளக்கக் கூடும்? அவர்கள் கூறுவது சரியெனக் காட்டத் தம் சான்றுகளைக் கொண்டு வரட்டும்; மக்கள் அதைக்கேட்டு 'உண்மை' என்று சொல்லட்டும்.