Bible Versions
Bible Books

2 Kings 5:1 (AKJV) American King James Version

Versions

TOV   சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.
IRVTA   {நாகமான் தொழுநோயிலிருந்து சுகமாக்கப்படுதல்} PS சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் எஜமானிடத்தில் பெரியவனும் மதிக்கத்தக்கவனுமாக இருந்தான்; அவனைக்கொண்டு யெகோவா சீரியாவுக்கு வெற்றியைக் கொடுத்தார்; மிகவும் பலசாலியாகிய அவனோ தொழுநோயாளியாக இருந்தான்.
ERVTA   நாகமான் என்பவன் ஆராம் அரசனின் படைத் தளபதி ஆவான். அவன் அரசனுக்கு மிகவும் முக்கியமானவன். ஏனெனில் அவன் மூலமாகத்தான் கர்த்தர் ஆராமுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அவன் மகா பராக்கிரமசாலியாக இருந்தான். ஆனால் தொழுநோயால் துன்புற்றான்.
RCTA   சீரியா அரசனின் படைத்தலைவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நாமான் என்று பெயர். அரசன் அவனைப் பெரிய மனிதனாக மதித்துப் போற்றி வந்தான். ஏனெனில் அவனைக் கொண்டு ஆண்டவர் சீரியாவைக் காப்பாற்றியிருந்தார். அவன் ஆற்றல் படைத்தவனும் செல்வனுமாய் இருந்தும், அவனுக்குத் தொழுநோய் கண்டிருந்தது.
ECTA   சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமை மிக்க வீரர்; ஆனால் தொழுநோயாளி.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us