Bible Versions
Bible Books

1 Samuel 17 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பெலிஸ்தர் யுத்தம் பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்.
IRVTA   {இஸ்ரவேலர்களுக்குக் கோலியாத்தின் சவால்} PS பெலிஸ்தர்கள் யுத்தம் செய்வதற்குத் தங்கள் இராணுவங்களைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒன்றாகக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே முகாமிட்டார்கள்.
ERVTA   பெலிஸ்தர் போரிடும் பொருட்டு படையாட்களைக் கூட்டினார்கள். அவர்கள் யூதாவிலுள்ள சோக்கோவில் கூடினார்கள். அவர்கள் கூடிய எபேஸ்தம்மீம் எனும் இடம் சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் இடையில் இருந்தது.
RCTA   பிலிஸ்தியர் மறுபடியும் போருக்குப் படைகளைத் திரட்டிக் கொண்டு யூதாவினுடைய சொக்கோவுக்கு வந்து, சொக்கோவுக்கும் அசேக்காவுக்கும் நடுவில் தொம்மீம் எல்லைகளில் பாசறை அமைத்தனர்.
ECTA   பெலிஸ்தியர் போருக்குப் படைகளை யூதாவிலுள்ள சோக்கோவில் ஒன்று திரட்டினார். சோக்காவுக்கும் அசேக்காவுக்கும் இடையேயுள்ள எபெசுதம்மில் அவர்கள் பாசறை அமைத்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us