Bible Versions
Bible Books

1 Samuel 17:39 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்து பார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு,
IRVTA   அவனுடைய பட்டயத்தை தாவீது தன் உடைகளின்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்து பார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகமுடியாது; இந்த பழக்கம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு,
ERVTA   தாவீது வாளை எடுத்துக்கட்டிக் கொண்டு நடந்து பார்த்தான். சவுலின் சீருடையை அணிந்து பார்த்தான். ஆனால் அவ்வளவு பாரமான யுத்த சீருடை அணிந்து கொள்ளும் பயிற்சி அவனுக்கு இருக்கவில்லை. தாவீது சவுலிடம், "இவற்றை அணிந்து என்னால் சண்டை போட முடியாது. அணிந்து பழக்கமில்லை" என்றான். எனவே தாவீது எல்லாவற்றையும் கழற்றினான்.
RCTA   தாவீது அவரது வாளைத் தன் ஆடையின்மேல் கட்டிக்கொண்டு, இப்படி ஆயுதம் அணிந்து நடக்க முடியுமா என்று சோதித்துப் பார்த்தான்; ஏனெனில் அவனுக்குப் பழக்கம் இல்லை. தாவீது சவுலை நோக்கி, "எனக்குப் பழக்கம் இல்லாததால் இவ்விதம் நடக்க என்னால் முடியாது" என்று சொல்லி, அவற்றைக் களைந்து போட்டான்.
ECTA   தாவீது சவுலின் வாளைத் தம் உடை மீது கட்டிக் கொண்டு தமக்குப் பழக்கமில்லாததால் நடந்து பார்த்தார். தாவீது சவுலை நோக்கி, "இவற்றுடன் என்னால் நடக்கவியலாது, ஏனெனில் இதில் எனக்குப் பழக்கம் இல்லை" என்று கூறி அவற்றை கலைத்து விட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us