Bible Versions
Bible Books

1 Kings 22:15 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: "போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்" என்றான்.
IRVTA   அவன் ராஜாவிடம் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப் போகலாமா, போகவேண்டாமா என்று கேட்டான். அதற்கு அவன்: நீர் போம், உமக்கு வாய்க்கும்; யெகோவா அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்; என்றான்.
ERVTA   பிறகு அவன் அரசனிடம் வந்து நின்றான். அரசனும், "நானும் யோசபாத்தும் சேரலாமா? சீரிய மன்னனோடு சண்டையிட ராமோத்துக்குப் போகலாமா?" என்று கேட்டான். அதற்கு மிகாயா, "சரி, நீ இப்போதே போய் சண்டையிடு, கர்த்தர் வெற்றிபெறச் செய்வார்" என்றான்.
RCTA   அவர் அரசன்முன் வந்து நிற்க, அவன் அவரை நோக்கி, "மிக்கேயாசு, நாங்கள் கலாத்திலுள்ள ராமோத்தின் மேல் போரிடப் போகலாமா, போகலாகாதா?" என்று கேட்டான். அதற்கு அவர், "நீர் நலமே போகலாம். ஆண்டவர் அதை உமக்குக் கையளிப்பார்" என்றார்.
ECTA   அவர் அரசன் முன் வந்து நிற்க, அவன் அவரை நோக்கி "மீக்காயா! நாங்கள் இராமோத்து-கிலயாதின்மீது போரிடப் போகலாமா? கூடாதா?" என்று கேட்டான். அதற்கு அவர், "போகலாம்! வெற்றிகொள்வீர்! அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்!" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us