Bible Versions
Bible Books

Hosea 2:2 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   உங்கள் தாயோடே வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குப் புருஷனுமல்ல; அவள் தன் வேசித்தனங்களைத் தன் முகத்தினின்றும், தன் விபசாரங்களைத் தன் ஸ்தனங்களின் நடுவினின்றும் விலக்கிப்போடக்கடவள்.
IRVTA   உங்கள் தாயுடன் வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குக் கணவனுமல்ல; அவள் தன் விபச்சாரச்செயலை தன் முகத்திலிருந்தும், தன் விபசாரங்களைத் தன் இருப்பிடத்தின் நடுவிலிருந்தும் விலக்கிப்போடவேண்டும்.
ERVTA   "உங்கள் தாயோடு வழக்காடுங்கள். ஏனென்றால் அவள் எனது மனைவியல்ல. நான் அவளது கணவனும் அல்ல. அவளிடம் ஒரு வேசியைப் போன்று நடந்துக் கொள்வதை நிறுத்தவேண்டும் என்று சொல்லுங்கள், அவளது மார்பகங்களில் இருந்து தனது நேசர்களை விலக்கும்படி அவளுக்குச் சொல்லுங்கள்.
RCTA   வழக்குத் தொடுங்கள், உங்கள் அன்னையோடு வழக்காடுங்கள்- அவள் எமக்கு மனைவியுமல்லள், நாம் அவளுக்கு கணவனுமல்லோம்- அவள் வேசித்தனத்தின் குறிகளைத் தன் முகத்தினின்றும், விபசாரக் குறிகளைத் தன் கொங்கைகளினின்றும், அகற்றட்டும்.
ECTA   "வழக்காடுங்கள், உங்கள் அன்னையோடு வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல; நான் அவளுக்குக் கணவனுமல்ல; அவள் வேசித்தனத்தின் குறிகளைத் தன் முகத்தினின்றும், விபசார குறிகளைத் தன் மார்பினின்றும் அகற்றட்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us