Bible Versions
Bible Books

2 Chronicles 22:5 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவர்களுடைய ஆலோசனைக்கு உட்பட்டவனாய், அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் குமாரனோடேகூட, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ணப்போனான்; அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
IRVTA   அவர்களுடைய ஆலோசனைக்கு உடன்பட்டு, அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் மகன்களோடு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக போர்செய்யப்போனான்; அங்கே சீரியர்கள் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
ERVTA   ஆகாபின் குடும்பத்தினர் தந்த அறிவுரைகளை அகசியா பின்பற்றினான். இவன் யோராமோடு சேர்ந்துகொண்டு ஆராமின் அரசனான ஆசகேலுக்கு எதிராகச் சண்டையிட ராமோத் கீலேயாத் நகரத்திற்குச் சென்றான். யோராமின் தந்தையின் பெயர் ஆகாப். இவன் இஸ்ரவேலின் அரசன். ஆனால் ஆராமியர்கள் போரில் யோராமைக் காயப்படுத்தினர்.
RCTA   அவர்களின் கெடுமதிகளைக் கேட்டு ஒக்கோசியாஸ் இஸ்ராயேலின் அரசன் யோராம் என்ற ஆக்காபின் மகனோடு கலாத் நாட்டு இராமோத்தின் மேல் படையெடுத்துச் சென்று சீரியா அரசன் அசாயேலை எதிர்த்துப் போரிட்டான். அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினர்.
ECTA   அகசியா, அவர்களுடைய ஆலோசனையின்படி நடந்து, ஆகாபின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோராமுடன் சேர்ந்து கொண்டு, சிரியா மன்னன் அசாவேலுக்கு எதிராக இராமோத்தில் போர் தொடுத்தான். அங்கே சிரியர் யோராமைத் தாக்கினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us