Bible Versions
Bible Books

Exodus 3:4 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
IRVTA   அவன் பார்க்கும்படி அருகில் வருகிறதைக் யெகோவா கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: “மோசே, மோசே” என்று கூப்பிட்டார். அவன்: “இதோ, அடியேன்” என்றான்.
ERVTA   புதரைப் பார்ப்பதற்கு மோசே வந்து கொண்டிருப்பதைக் கர்த்தர் கண்டார். எனவே, தேவன் புதரிலிருந்து, "மோசே, மோசே!" என்று கூப்பிட்டார். மோசே, "நான் இங்கே இருக்கிறேன்" என்றான்.
RCTA   ஆனால், அவன் உற்றுப் பார்க்க வருவதை ஆண்டவர் கண்டு, முட்செடியின் நடுவினின்று: மோயீசா, மோயீசா என்று அவனை அழைக்க, அவன்: இதோ இருக்கிறேன் என்று மறுமொழி கூறினான்.
ECTA   அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். "மோசே, மோசே" என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் "இதோ நான்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us