Bible Versions
Bible Books

1 Kings 20 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டுபோய், சமாரியாவை முற்றிக்கைபோட்டு அதின்மேல் யுத்தம்பண்ணினான்; அவனோடேகூட முப்பதிரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது.
IRVTA   {பெனாதாத் சமாரியாவைத் தாக்குதல்} PS சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன்னுடைய படையையெல்லாம் கூட்டிக்கொண்டுபோய், சமாரியாவை முற்றுகையிட்டு அதின்மேல் யுத்தம்செய்தான்; அவனோடு முப்பத்திரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது.
ERVTA   பெனாதாத் ஆராமின் அரசன். அவன் தனது படையைத் திரட்டி 32 அரசர்களோடும் குதிரைகளோடும் இரதங்களோடும் சமாரியாவைத் தாக்கி முற்றுகையிட்டான்.
RCTA   சீரியாவின் அரசன் பெனாதாத் தன் எல்லாச் சேனைகளையும் குதிரைகளையும் தேர்களையும் முப்பத்திரண்டு அரசர்களையும் தன்னோடு கூட்டிக் கொண்டு சமாரியாவின் மேல் படையெடுத்து அதை முற்றுகையிட்டான்.
ECTA   சிரியாவின் மன்னன் பெனதாது தன் படை முழுவதையும் திரட்டிக்கொண்டு, முப்பத்திரண்டு மன்னர்களோடு சேர்ந்து, குதிரைகளோடும் தேர்களோடும் சமாரியாவை முற்றுகையிட்டுத் தாக்கினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us