Bible Versions
Bible Books

Job 34:19 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.
IRVTA   இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும்,
ஏழையைவிட செல்வந்தனை அதிகமாக நினைக்காமலும் இருக்கிறவரை நோக்கி
இப்படிச் சொல்லலாமா?
இவர்கள் எல்லோரும் அவர் கரங்களின் செயல்களே.
ERVTA   தேவன் ஜனங்களைக் காட்டிலும் தலைவர்களை நேசிப்பதில்லை. தேவன் ஏழைகளைக் காட்டிலும் செல்வந்தரை நேசிப்பதில்லை. ஏனெனில், தேவனே ஒவ்வொருவரையும் உண்டாக்கினார்.
RCTA   தலைவர்களை அவர் ஓரவஞ்சனையால் நடத்துகிறதில்லை, ஏழைகளை விடச் செல்வர்களை அவர் மிகுதியாய் மதிக்கிறதில்லை; ஏனெனில் அவர்களனைவரும் அவருடைய கை வேலைகளே.
ECTA   அவர் ஆளுநனை ஒருதலைச்சார்பாய் நடத்த மாட்டார்; ஏழைகளை விடச் செல்வரை உயர்வாய்க் கருதவுமாட்டார்; ஏனெனில், அவர்கள் அனைவரும் அவர் கைவேலைப்பாடுகள் அல்லவா?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us