Bible Versions
Bible Books

Song of Solomon 1:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?
IRVTA   என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து,
அதை மத்தியானத்தில் எங்கே சேர்க்கிறீர்?
எனக்குச் சொல்லும்;
உமது தோழர்களின் மந்தைகளின் அருகே அலைந்து திரிகிறவளைப்போல § முக்காடுயிட்ட பெண்ணைப் போல் நான் இருக்கவேண்டியதென்ன? PEPS மணவாளன்
ERVTA   நான் என் முழு ஆத்துமாவோடும் உம்மை நேசிக்கிறேன். எனக்குச் சொல்லும்; உமது மந்தையை எங்கே மேயவிடுகிறீர்? மதியானத்தில் அதனை எங்கே இளைப்பாறச் செய்வீர்? நான் உம்மோடு இருக்க வரவேண்டும். அல்லது உமது நண்பர்களின் மந்தைகளைப் பராமரிப்பதற்கு அமர்ந்தப்பட்ட பெண்ணைப்போல் இருப்பேன்.
RCTA   (6) என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரே, உமது மந்தையை நீர் எங்கே மேய்க்கிறீர்? நண்பகலில் எங்கே அடையப் போடுகிறீர்? உம்முடைய தோழர்களின் மந்தைகளைப் பின்தொடர்ந்து நான் அலைந்து திரியாதபடி எனக்குத் தெரியப்படுத்தும்.
ECTA   என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரே! எங்கே நீர் ஆடு மேய்ப்பீர்? எங்கே நண்பகலில் மந்தையை இளைப்பாற விடுவீர்? எனக்குச் சொல்வீர்! இல்லையேல், உம் தோழர்களின் மந்தைகட்கருகில் வழி தவறியவள் போல் நான் திரிய நேரிடும்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us