Bible Versions
Bible Books

1 Samuel 2:10 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.
IRVTA   யெகோவாவோடு வாதாடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்;
வானத்திலிருந்து அவர்கள்மேல் முழக்கமிடுவார்;
யெகோவா பூமியின் கடைசிவரை நியாயந்தீர்த்து,
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து,
தாம் அபிஷேகம் செய்தவரின் பெலனை உயரச்செய்வார்” என்று துதித்தாள்.
ERVTA   கர்த்தரை எதிர்ப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள். உன்னதமான தேவன் பரலோகத்திலிருந்த தமது எதிரிகளுக்கு எதிராக இடியாய் முழங்குவார். கர்த்தர் பூமியின் கடைசி பகுதியையும் நீயாயந்தீர்ப்பார். அவர் தமது அரசனுக்கு வல்லமையை அளிப்பார். தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப் பண்ணுவார்" என்றாள்.
RCTA   ஆண்டவரின் எதிரிகள் அவருக்கு அஞ்சி நடுங்குவர். அவர் விண்ணிலிருந்து அவர்கள் மேல் இடி இடிக்கச் செய்வார். ஆண்டவர் பூமியின் எல்லைகளைத் தீர்வையிடுவார்; அதன் ஆட்சியைத் தம் அரசனுக்குக் கொடுப்பார். தம் கிறிஸ்துவின் வல்லமையை உயர்த்துவார்."
ECTA   ஆண்டவரை எதிர்ப்போர் நொறுக்கப்படுவர்! அவர் அவர்களுக்கு எதிராக வானில் இடிமுழங்கச் செய்வார்! ஆண்டவர் உலகின் எல்லை வரை தீர்ப்பிடுவார்! தம் அரசருக்கு வலிமை தருவார்! தாம் திருப்பொழிவு செய்தவரின் ஆற்றலை உயர்த்துவார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us