Bible Versions
Bible Books

2 Kings 9:11 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   யெகூ தன் ஆண்டவனுடைய ஊழியக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்தில் வந்தது என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனுஷனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.
IRVTA   யெகூ தன் எஜமானுடைய ஊழியக்காரர்களிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்திற்கு எதற்காக வந்தான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனிதனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.
ERVTA   அரசனின் வேலைக்காரர்கள் (அதிகாரிகள்) இருந்த இடத்திற்கு யெகூ போனான். அந்த அதிகாரிகளில் ஒருவன், "எல்லாம் சரியாக உள்ளதா? ஏன் அந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் வந்தான்" என்று கேட்டான். யெகூ வேலைக்காரர்களிடம், "உங்களுக்கு அவனையும் அவனது பைத்தியகாரத்தனச் செயலையும் தெரியுமே" என்றான்.
RCTA   பின்பு ஏகு தன் தலைவரின் ஊழியர் கூடியிருந்த இடத்திற்கு வந்தான். அவர்கள் அவனைப் பார்த்து, "நல்ல செய்தி தானா? அந்தக் கிறுக்கன் உம்மிடம் என்ன சொல்ல வந்தான்?" என்றனர். அதற்கு அவன், "அவன் யார் என்றும் அவன் சொன்னது என்ன என்றும் உங்களுக்குத் தெரியுமே" என்றான்.
ECTA   பின்பு ஏகூ தன் தலைவரின் ஊழியர் கூடியிருந்த இடத்திற்கு வந்தான். அவர்கள் அவனை நோக்கி, "நல்ல செய்திதானா? இந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் வந்தது ஏன்?" என்று கேட்டனர். அதற்கு அவன், "அவன் யாரென்றும் அவன் சொன்னது என்னவென்றும் உங்களுக்குத் தெரியுமே!" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us