Bible Versions
Bible Books

2 Kings 9:25 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது யெகூ, தன் சேனாபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்துபோடு; நானும் நீயும் ஒரு சோடாய் அவன் தகப்பனாகிய ஆகாபின் பிறகே குதிரை ஏறிவருகிறபோது, கர்த்தர் இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.
IRVTA   அப்பொழுது யெகூ, தன் சேனாதிபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலயனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்துபோடு; நானும் நீயும் ஒன்றுசேர்ந்து அவனுடைய தகப்பனாகிய ஆகாபின் பின்னே குதிரையில் ஏறிவருகிறபோது, யெகோவா இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.
ERVTA   யெகூ தனது இரத ஓட்டியான பித்காரிடம் , "யோராமின் உடலை எடுத்து யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயலில் ஏறி. நானும் நீயும் யோரோமின் தந்தையான ஆகாபோடு பயணம் செய்யும்போது, இவனுக்கு இவ்வாறே நிகழும் என்று கர்த்தர் சென்னதை எண்ணிப்பார்.
RCTA   ஏகு படைத்தலைவன் பதாசரை நோக்கி, "அவனைத் தூக்கி ஜெஸ்ராயேல் ஊரானான நாபோத்தின் வயலில் எறிந்துவிடு. ஏனெனில் நாம் இருவரும் தேரில் இவனுடைய தந்தை ஆக்காபைத் தொடர்ந்த போது, அவனுக்கு இக்கதி நேரிடும் என ஆண்டவர் கூறியது என் நினைவிற்கு வருகிறது.
ECTA   ஏகூ குதிரைப்படைத் தலைவன் பித்காரை நோக்கி, "அவனைத் தூக்கி இஸ்ரயேலைச் சார்ந்த நாபோத்தின் நிலப்பகுதியில் எறிந்துவிடு. ஏனெனில் நாம் இருவரும் சேர்ந்து அவனுடைய தந்தை ஆகாபைத் தொடர்ந்து சென்றபோது அவனுக்கு எதிராக ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us