Bible Versions
Bible Books

2 Samuel 19:22 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அதற்குத் தாவீது: செருயாவின் குமாரரே, இன்று நீங்கள் எனக்குச் சத்துருக்களாகிறதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா? இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி,
IRVTA   அதற்கு தாவீது: செருயாவின் மகன்களே, இன்று நீங்கள் எனக்கு எதிரிகளாவதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா? இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி,
ERVTA   தாவீது, "செருயாவின் மகன்களே, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? இன்று நீங்கள் என் எதிராளி. ஆனால் இஸ்ரவேலில் ஒருவனும் இன்று கொல்லப்படமாட்டான். இஸ்ரவேலுக்கு நான் அரசன் என்பது இன்று எனக்குத் தெரியும்" என்றான்.
RCTA   அதற்கு தாவீது, "சார்வியாவின் புதல்வரே, அதைப் பற்றி உங்களுக்கும் எனக்கும் என்ன? இன்று நீங்கள் எனக்குச் சாத்தானாய் இருக்க வேண்டியது என்ன? இன்று இஸ்ராயேலில் யாரையாவது கொல்லலாமா? நான் இஸ்ராயேலின் அரசர் என்று இன்று எனக்குத் தெரியாதா?" என்றார்.
ECTA   அதற்கு தாவீது "செரூயாவின் புதல்வர்களே! இது பற்றி உங்களுக்கு என்ன? இன்று நீங்கள் எனக்கு எதிரிகள் போல் நடந்து கொள்வது ஏன்? இன்று இஸ்ரயேலில் யாராவது கொல்லப்பட வேண்டுமோ? இன்று நான் இஸ்ரயேலின் அரசர் என்பது எனக்குத் தெரியாதா? என்று கூறினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us