Bible Versions
Bible Books

Hebrews 6:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக.
IRVTA   ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம்.
ERVTA   ஞானஸ்நானம் பற்றியும், கைகளைத் தலை மேல் வைப்பதுபற்றியும், மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் பற்றியும், என்றென்றைக்குமான நியாயத்தீர்ப்பு பற்றியும் ஏற்கெனவே நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, இதற்கு மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம்கொண்டவர்களாக நாம் முன்னேற வேண்டும்.
RCTA   கடவுளில் விசுவாசம், கழுவுதல் சடங்குகளையும் கைகளை விரித்தலையும் பற்றிய போதனை, இறந்தோர் உயிர்த்தெழுதல், முடிவில்லா வாழ்வுக்கான தீர்ப்பு ஆகியவற்றைப் போதித்து மறுபடியும் அடிப்படை இடவேண்டியதில்லை.
ECTA   சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து மனம்மாற்றம், கடவுள் மீது நம்பிக்கை, முழுக்குகள், கையமர்த்தல் பற்றிய படிப்பினை, இறந்தோரின் உயிர்ப்பு, என்றும் நிலைக்கும் தீர்ப்பு ஆகிய தொடக்க நிலைப் படிப்பினைகளைக் கற்பித்து மீண்டும் அடித்தளம் இடத் தேவையில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us