Bible Versions
Bible Books

Isaiah 29:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்கிறவர்களுக்கு ஐயோ!
IRVTA   தங்கள் ஆலோசனையைக் யெகோவாவுக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் செயல்களை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைப் பார்க்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ,
ERVTA   அந்த ஜனங்கள் சிலவற்றைக் கர்த்தரிடம் மறைக்க முயல்கிறார்கள். கர்த்தர் இதனைப் புரிந்துகொள்ளமாட்டார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அந்த ஜனங்கள் இருட்டில் தங்கள் கெட்ட செயல்களைச் செய்கிறார்கள். அவர்கள் தமக்குள்: "எவரும் எங்களைப் பார்க்க முடியாது. நாங்கள் யார் என்று எவருக்கும் தெரியாது" எனக் கூறுகிறார்கள்.
RCTA   ஆண்டவரிடமிருந்து தங்கள் யோசனையை மறைக்கும்படி ஆழத்தில் தங்களை ஒளித்துக்கொண்டு, "நம்மைப் பார்ப்பவர் யார்? நம்மை அறிபவர் யார்?" என்று சொல்லிக்கொண்டு இருளில், திட்டங்கள் தீட்டுபவர்களுக்கு ஐயோ கேடு!
ECTA   ஆண்டவரிடமிருந்து தங்கள் திட்டங்களை மனத்தின் ஆழங்களில் மறைத்துக்கொண்டு, தங்கள் செயல்களை இருளில் செய்து, "நம்மை எவர் காணப்போகின்றார்? நம்மை எவர் அறியப் போகின்றார்?" எனச் சொல்வோருக்கு ஐயோ கேடு!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us