Bible Versions
Bible Books

Acts 24:1 (NLV) New Life Verson

Versions

TOV   ஐந்து நாளைக்குப்பின்பு பிரதானஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.
IRVTA   {யூதர்களின் குற்றச்சாட்டு} PS ஐந்து நாட்களுக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்கறிஞரோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு எதிராக தேசாதிபதியினிடத்தில் முறையீடு செய்தார்கள்.
ERVTA   ஐந்து நாட்களுக்குப் பிறகு அனனியா செசரியா நகரத்திற்கு வந்தான். அனனியா தலைமை ஆசாரியனாக இருந்தான். சில முதிய யூதத் தலைவர்களையும் தெர்த்துல்லு என்னும் பெயருள்ள வழக்கறிஞரையும் அனனியா அழைத்து வந்திருந்தான். ஆளுநர் முன்னால் பவுல் மீது வழக்கு தொடுக்கும் பொருட்டு அவர்கள் செசரியாவுக்குச் சென்றார்கள்.
RCTA   ஐந்து நாளைக்குப்பின், தலைமைக் குரு அனனியா மூப்பர் சிலரோடும், தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்கறிஞனோடும் செசரியாவுக்கு வந்தார். அவர்கள் ஆளுநனிடம் சின்னப்பருக்கு எதிராக முறையிட்டார்கள்.
ECTA   ஐந்து நாளுக்குப்பின் தலைமைக்குருவான அனனியாவும் சில மூப்பர்களும் வழக்குரைஞரான தெர்த்துல் என்பவரும் வந்து பவுலுக்கெதிராக ஆளநரிடம் முறையிட்டார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us