Bible Versions
Bible Books

Jeremiah 4:1 (NLV) New Life Verson

Versions

TOV   இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.
IRVTA   இஸ்ரவேல், நீ திரும்புகிறதற்கு மனமிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று யெகோவா சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையிலிருந்து அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.
ERVTA   "இஸ்ரவேலே, நீ திரும்பி வர வேண்டுமென்று விரும்பினால் என்னிடம் திரும்பி வா. உனது விக்கிரகங்களைத் தூர எறி. என்னை விட்டுத் தூரமாக அலையாதே.
RCTA   ஆண்டவர் கூறுகிறார்: "இஸ்ராயேலே, நீ திரும்பி வர விரும்பினால் நம்மிடமே திரும்பி வர வேண்டும். நமது முன்னிலையிலிருந்து அருவருப்பானவற்றை எடுத்து விடு; அப்போது நீ தயங்கமாட்டாய்.
ECTA   இஸ்ரயேலே, நீ திரும்பிவருவதாக இருந்தால் என்னிடம் திரும்பிவா, என்கிறார் ஆண்டவர். அருவருப்பானவற்றை அகற்றி விட்டால் என் திருமுன்னிருந்து அலைந்து திரியமாட்டாய்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us