Bible Versions
Bible Books

Joshua 17:16 (NLV) New Life Verson

Versions

TOV   அதற்கு யோசேப்பின் புத்திரர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இருப்புரதங்கள் உண்டு என்றார்கள்.
IRVTA   அதற்கு யோசேப்பின் சந்ததியினர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் கிராமங்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியர்களிடமும் இரும்பு இரதங்கள் உண்டு என்றார்கள்.
ERVTA   யோசேப்பின் ஜனங்கள், "எங்களுக்கு எப்பிராயீமின் மலைநாடு போதுமான அளவு பெரியது அல்ல. ஆனால் அங்கு வாழும் கானானியரிடம் ஆற்றல் வாய்ந்த போர்க்கருவிகள் உள்ளன. அவர்களிடம் இரும்பாலாகிய தேர்கள் இருக்கின்றன! அந்த ஜனங்களே பள்ளத்தாக்கிலும் அதிகாரம் செலுத்துகின்றனர்! யெஸ்ரேயேல் பள்ளத்தாக்கு, பெத்செயான், அங்குள்ள சிறிய ஊர்கள் ஆகியவற்றின் அதிகாரமும் அவர்களிடமே உள்ளது" என்றார்கள்.
RCTA   அதற்கு சூசையின் புதல்வர், "மலைகளுக்கு எப்படிப் போகக்கூடும்? சமவெளியிலிருக்கிற பெத்தாசினிலும் அதன் ஊர்களிலும் பள்ளத்தாக்கின் நடுவே இருக்கிற ஜெஸ்ராயேலிலும் குடியிருக்கும் கானானையர் இருப்பாயுதங்களுடன் தேர்களைப் பயன்படுத்தி வருகிறார்களே" என்றனர்.
ECTA   யோசேப்பின் மக்கள், "மலைப்பகுதி எங்களுக்குப் போதாது. மேலும் சமவெளியில் இருக்கும் பெத்சானிலும் அதன் ஊர்களிலும், மற்றும் இஸ்ரியேல் சமவெளியிலும் வாழும் கானானியர் அனைவரிடமும் இரும்புத் தேர்கள் இருக்கின்றன" என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us