Bible Versions
Bible Books

Exodus 32:11 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?
IRVTA   மோசே தன்னுடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி: “யெகோவாவே, தேவரீர் மகா பெலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உம்முடைய மக்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவது ஏன்?
ERVTA   ஆனால் மோசே தேவனாகிய கர்த்தரை மிகவும் கெஞ்சி, "கர்த்தாவே, உமது கோபத்தால் உமது ஜனங்களை அழித்து விடாதேயும். உமது மிகுந்த ஆற்றலினாலும் வல்லமையாலும் நீர் இந்த ஜனங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தீர்.
RCTA   மோயீசனோ தம் கடவுளாகிய ஆண்டவரை மன்றாடி ஆண்டவரே! நீர் மகத்தான பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து நாட்டினின்று விடுதலையாக்கிய உம் மக்கள் மேல் ஏன் உமது கோபம் மூள வேண்டும்?
ECTA   அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, "ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us