Bible Versions
Bible Books

Haggai 2:14 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அப்பொழுது ஆகாய்; அப்படியே இந்த ஜனங்களும் இந்த ஜாதியாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லாக் கிரியைகளும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது.
IRVTA   அப்பொழுது ஆகாய்; அப்படியே இந்த மக்களும் இந்த தேசத்தாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லா செயல்களும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது. PS
ERVTA   பிறகு ஆகாய், "தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘இந்த ஜனங்களைக் குறிக்கும் இது உண்மையாகும். அவர்கள் எனக்கு முன்னால் தூய்மையும் பரிசுத்தமும் இல்லாதவர்கள். எனவே அவர்கள் கைகளால் தொடுகிற எதுவுமே தீட்டாகும. பலிபீடத்திற்கு கொண்டு வருகிற எதுவுமே தீட்டாகும்.
RCTA   (13) அப்போது ஆகாய் அவர்களிடம் சொன்னார்: "அதே போலத் தான் நம் திருமுன் இந்த மக்களும் இந்த இனத்தாரும், என்கிறார் ஆண்டவர்; அவ்வாறே அவர்கள் உழைப்பின் பலன் ஒவ்வொன்றும், அவர்கள் ஒப்புக்கொடுக்கும் பொருளும் தீட்டுப்பட்டவை.
ECTA   தொடர்ந்து ஆகாய் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்; "அதேபோலத்தான் எனது திருமுன் இந்த மக்களும் இந்த இனத்தாரும், "என்கிறார் ஆண்டவர். அவ்வாறே அவர்களது உழைப்பின் பயன் ஒவ்வொன்றும் இருக்கிறது. அவர்கள் அங்கே கொண்டு வந்து படைக்கும் பொருளும் தீட்டுப்பட்டதே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us