Bible Versions
Bible Books

Isaiah 62:8 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக் கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலது கரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.
IRVTA   இனி நான் உன் தானியத்தை உன் எதிரிகளுக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சைரசத்தை அந்நிய தேசத்தார் குடிப்பதுமில்லையென்று யெகோவா தமது வலது கரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் வாக்குக்கொடுத்தார்.
ERVTA   கர்த்தர் ஒரு வாக்குறுதிச் செய்தார். கர்த்தர் தன் சொந்த வல்லமையைச் சான்றாகப் பயன்படுத்தினார். கர்த்தர் தன் வாக்குறுதியைக் காப்பாற்ற தனது வல்லமையைப் பயன்படுத்துவார். கர்த்தர் சொன்னார், "உங்கள் உணவை உங்கள் பகைவர்களுக்கு மீண்டும் கொடுக்கமாட்டேன் என்று வாக்களிக்கிறேன். நீங்கள் உருவாக்கிய திராட்சைரசத்தை உங்கள் பகைவர்கள் மீண்டும் எடுத்துக்கொள்ள விடமாட்டேன் என்று வாக்களிக்கிறேன்.
RCTA   ஆண்டவர் தம் வலக்கையால் ஆணையிட்டு, வல்லமையுள்ள தம் கரமுயர்த்தி உறுதி சொன்னார்: "உன் கோதுமையைப் பகைவர்களுக்கு உணவாக இனி நாம் தரவே மாட்டோம்; நீ உழைத்து பிழிந்த திராட்சை இரசத்தைப் புறவினத்தாரின் மக்கள் குடிக்க விடமாட்டோம்.
ECTA   ஆண்டவர் தம் வலக்கையின் மேலும் வலிமைமிக்க தம் புயத்தின் மேலும் ஆணையிட்டுக் கூறியது; உன் தானியத்தை இனி நான் உன் பகைவருக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்; உன் உழைப்பால் கிடைத்த திராட்சை இரசத்தை வேற்றின மக்கள் பருகமாட்டார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us