Bible Versions
Bible Books

Jeremiah 6:15 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? ஆனாலும் வெட்கப்படமாட்டார்கள், வெட்கப்படவும் அவர்களுக்குத் தெரியாது; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், தாங்கள் செய்கிற தீயச்செயல்களுக்காக வெட்கப்பட வேண்டும். ஆனால், அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை தங்கள் பாவங்களுக்காக வெட்கப்படும் அளவிற்கு அவர்களுக்கு போதிய அறிவில்லை; எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவார்கள். நான் ஜனங்களைத் தண்டிக்கும்போது, அவர்கள் தரையில் வீசியெறியப்படுவார்கள்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.
RCTA   அருவருப்பானதைச் செய்யும் போது அவர்கள் வெட்கி நாணினார்களா இல்லவே இல்லை; அவர்கள் வெட்கி நாணவில்லை. வெட்கம் என்பதே அவர்களுக்கு என்னவென்று தெரியாது, ஆகையால் மடிகிறவர்களோடு விழுந்து மடிவார்கள், அவர்களை நாம் தண்டிக்கும் காலத்தில் அவர்கள் வீழ்த்தப்படுவர்" என்கிறார் ஆண்டவர்.
ECTA   அருவருப்பானதைச் செய்தபோது அவர்கள் வெட்கமடைந்தார்களா? அப்போதுகூட அவர்கள் வெட்கமடையவில்லை; நாணம் என்பதே என்னவென்று அவர்களுக்குத் தெரியாது; எனவே, மடிந்து வீழ்ந்தவர்களோடு அவர்களும் வீழ்வர்; நான் அவர்களைத் தண்டிக்கும்போது அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us