Bible Versions
Bible Books

Joshua 6:22 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு புருஷரை நோக்கி: நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய், நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
IRVTA   யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு மனிதர்களை நோக்கி: நீங்கள் அந்த விலைமாதுவின் வீட்டிற்குப் போய், நீங்கள் அவளுக்கு வாக்குச்செய்தபடி அந்தப் பெண்ணையும் அவளுக்கு உண்டான எல்லாவற்றையும் அங்கிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
ERVTA   யோசுவா இரண்டு ஒற்றரோடும் பேசினான். யோசுவா, "அந்த வேசியின் வீட்டிற்குள் போங்கள். அவளையும், அவளோடு இருப்போர் அனைவரையும் வெளியே அழைத்து வாருங்கள். நீங்கள் அவளுக்கு அளித்த வாக்குறுதியின்படி இதைச் செய்யுங்கள்" என்றான்.
RCTA   உளவு பார்க்கும்படி முன்பு அனுப்பப்பட்டிருந்த இரு மனிதரையும் நோக்கி, யோசுவா, "அவ்விலைமாதின் வீட்டிற்குப் போய், நீங்கள் அவளுக்கு உறுதியளித்துள்ள படி அவளையும் அவளுக்குள்ள யாவற்றையும் அங்கிருந்து வெளியே கொண்டு வாருங்கள்" என்றார்.
ECTA   நாட்டை உளவு பார்த்த இரண்டுபேரிடம் யோசுவா, "விலைமாதின் வீட்டுக்குச் செல்லுங்கள். அவருக்கு வாக்களித்தபடி அங்கிருந்து அப்பெண்ணையும், அவருக்குரிய அனைத்தையும் வெளியே கொண்டுவாருங்கள்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us