Bible Versions
Bible Books

Numbers 11:17 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அப்பொழுது நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்.
IRVTA   அப்பொழுது நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடு பேசி, நீ ஒருவன் மட்டும் மக்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடு அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்.
ERVTA   பிறகு நான் இறங்கி வந்து உன்னோடு பேசுவேன். இப்போது ஆவியானவர் உன்மேல் உள்ளார். ஆனால் அவர்களுக்கும் ஆவியை அளிப்பேன். பிறகு இந்த ஜனங்களைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பில் அவர்கள் உனக்கு உதவுவார்கள். இவ்வகையில் நீ மட்டும் தனியாக இவர்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டியதிருக்காது."
RCTA   நாம் இறங்கிவந்து உன்னோடு பேசி, நீ ஒருவனாய் மக்களின் பாரத்தைச் சுமக்காமல், அவர்கள் அதைச் சுமக்க உனக்கு உதவிசெய்ய உன்மேல் இருக்கிற ஆவியில் வேண்டியமட்டும் நாம் எடுத்து அவர்கள்மேல் வைப்போம்.
ECTA   நான் இறங்கி வந்து அங்கே உன்னோடு பேசுவேன்; உன்னிலிருக்கும் ஆவியில் கொஞ்சம் எடுத்து நான் அவர்களுக்கு அளிப்பேன்; நீ மட்டும் சுமக்காதபடி மக்களின் பளுவை அவர்களும் உன்னோடு சேர்ந்து தாங்குவார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us