Bible Versions
Bible Books

Numbers 7:89 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   மோசே தேவனோடே பேசும்படி ஆசரிப்புக்கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது, தன்னோடே பேசுகிறவரின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்துண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடே பேசுவார்.
IRVTA   மோசே தேவனோடு பேசும்படி ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போது, தன்னோடே பேசுகிறவர்களின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் * ஆதி 3. அதிகாரத்தில் ஜீவ விருட்சத்தை பாதுகாக்க இருந்தது போல தெய்வீக பொருட்களை பாதுகாக்க இங்கு இருந்தன. நடுவிலிருந்து உண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடு பேசுவார். PE
ERVTA   கர்த்தரோடு பேசுவதற்காக மோசே ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளே சென்றான். அப்போது கர்த்தரின் குரல் அவனோடு பேசுவதைக் கேட்டான். அந்தக் குரலானது உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனமான இரு கேருபீன்களின் நடுவில் இருந்து உண்டாயிற்று. தேவன் மோசேயோடு பேசிய முறை இதுதான்.
RCTA   மோயீசன் கடவுளின் ஆலோசனை கேட்கும் பொருட்டு எப்பொழுது உடன்படிக்கையின் கூடாரத்திற்குள் புகுவாரோ அப்பொழுது இரக்கத்தின் இருப்பிடத்தினின்று தனக்கு விடை கொடுக்கிறவருடைய குரலைக் கேட்டுக் கொண்டிருப்பார். இரக்கத்தின் இருப்பிடம் சாட்சியப் பெட்டியின்மேல் இரண்டு கெருபீம்கள் நடுவே இருந்தது. அதனின்றே குரல்வரும்.
ECTA   ஆண்டவருடன் பேசும்படி மோசே சந்திப்புக் கூடாரத்தினுள் சென்றார். இரு கெருபுகளிடையே உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அரியணையிலிருந்து பேசிய குரலை அவர் கேட்டார்; ஆண்டவர் அவருடன் பேசினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us