Bible Language

Isaiah 59:7 (KJV) King James Version

Versions

TOV   அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது; அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது.
IRVTA   அவர்களுடைய கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதற்கு விரைகிறது; அவர்களுடைய நினைவுகள் அக்கிரம நினைவுகள்; பாழாகுதலும் அழிவும் அவர்களுடைய வழிகளிலிருக்கிறது.
ERVTA   அந்த ஜனங்கள் தம் கால்களைத் தீமைசெய்ய ஓடுவதற்குப் பயன்படுத்துவார்கள். அவர்கள் குற்றம் ஒன்றுமே செய்யாதவர்களைக் கொலை செய்ய விரைவார்கள். அவர்கள் தீய எண்ணங்களைச் சிந்திப்பார்கள். கலகமும் கொள்ளையும் அவர்களின் வாழ்க்கை முறையாக உள்ளது.
RCTA   அவர்களுடைய கால்கள் தீமை செய்ய ஓடுகின்றன, குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் விரைகிறார்கள்; அவர்கள் நினைவுகளோ அநீதியான நினைவுகளே, அவர்களுடைய வழிகளில் அழிவும் துன்பமுந்தான் உள்ளன.
ECTA   தீமை செய்ய அவர்கள் கால்கள் விரைகின்றன; குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் துடிக்கின்றனர்; அவர்கள் எண்ணங்கள் தீயவை; பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.