Bible Language

1 Samuel 14:17 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம் பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.
IRVTA   அப்பொழுது சவுல் தன்னோடு இருக்கிற மக்களைப் பார்த்து: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று கணக்கெடுங்கள் என்றான்; அவர்கள் கணக்கெடுக்கிறபோது, இதோ, யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.
ERVTA   சவுல், "நம்மவர்களை எண்ணிக் கணக்கிடுங்கள். முகாமிற்கு வெளியே யார் போனது என்று தெரியவேண்டும்" என்றான். அவர்கள் ஆட்களின் தொகையைக் கணக்கிட்டனர். யோனத்தானும் அவனது உதவியாளனும் காணவில்லை.
RCTA   சவுல் தம்மோடு இருந்தவர்களை நோக்கி, "நம்மை விட்டுப் போனவன் யார்? விசாரித்துப் பாருங்கள்" என்று சொன்னார். விவரம் ஆராய்கையில் யோனத்தாசும் அவனுடைய பரிசையனும் அங்கு இல்லை எனத் தெரிய வந்தது.
ECTA   சவுல் தம் ஆள்களை நோக்கி, "கணக்கெடுத்து நம்மைவிட்டுச் சென்றவர் யார் என்று பாருங்கள் "என்றார். அவர்கள் கணக்கெடுத்து பார்க்க யோனத்தானும் அவர்தம் படைக்கலன்களைத் தாங்குவோனும் இல்லை என்று கண்டனர்.