Bible Language

2 Samuel 13:28 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.
IRVTA   அப்சலோம் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அம்னோன் திராட்சைரசம் குடித்து சந்தோஷமாக இருக்கும் நேரத்தை நன்றாக எதிர்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாக இருங்கள் என்று சொல்லியிருந்தான்.
ERVTA   பின்பு, அப்சலோம் தன் வேலையாட்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டான். "அம்னோனை கவனித்துக்கொண்டிருங்கள். அவன் குடிக்க ஆரம்பித்து திராட்சைரசப் போதையில் ஆழ்ந்திருக்கும்போது, நான் உங்களுக்குக் கட்டளையிடுவேன். நீங்கள் அம்னோனைத் தாக்கி அவனைக் கொல்லுங்கள். தண்டனை நேரும் என்று அஞ்சாதீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எனது கட்டளைக்குப் பணிகிறீர்கள். இப்போது, துணிவும் வீரமும் உடையவர்களாய் இருங்கள்" என்றான்.
RCTA   அப்சலோம் தன் ஊழியர்களை நோக்கி, "அம்னோன் திராட்சை இரசத்தைக் குடித்துப் போதையில் இருக்கும் நேரத்தை நன்றாகப் பார்த்திருங்கள். அந்நேரத்தில் நான், 'அம்னோனை அடியுங்கள்' என்று சொல்லுவேன். உடனே அவனை நீங்கள் கொன்று போடுங்கள். அஞ்ச வேண்டாம்; ஏனெனில் உங்களுக்குக் கட்டளை இடுவது நானே. நீங்கள் திடம் கொண்டு தைரியமாய் இருங்கள்" என்று சொல்லிக் கட்டளை இட்டிருந்தான்.
ECTA   அப்சலோம் தம் பணியாளரிடம், "அம்னோனின் மனம் மதுவால் மயங்கும் நேரம் பாருங்கள்; அம்னோனைத் தாக்குங்கள்" என்று நான் உங்களிடம் கூறும் போது, அவனைக் கொன்றுவிடுங்கள். அஞ்சவேண்டாம். உங்களுக்குக் கட்டளையிடுபவன் நான் அல்லவா? உறுதிபூண்டு வீரர் புதல்வர்களாகச் செயல்படுங்கள்" என்று கூறினான்.