Bible Language

Hosea 10:13 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள்.
IRVTA   அநியாயத்தை உழுதீர்கள், அநீதியை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைச் சாப்பிட்டீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் திறமைசாலிகளின் கூட்டத்தையும் நம்பினீர்கள்.
ERVTA   ஆனால் நீ தீமையை நட்டாய். நீ துன்பத்தை அறுவடை செய்தாய். நீ உன் பொய்களின் கனியை உண்டாய். ஏனென்றால் நீ உன் அதிகாரத்தையும் உன் வீரர்களையும் நம்பியிருந்தாய்.
RCTA   நீங்கள் அக்கிரமத்தை உழுதீர்கள், அநீதியை அறுவடை செய்தீர்கள், பொய்களின் கனியைத் தின்றீர்கள், உங்கள் தேர்ப்படைகளின் மேலும், வீரர்களின் எண்ணிக்கையின் மேலும் நீங்கள் நம்பிக்கை வைத்ததால்,
ECTA   நீங்கள் கொடுமையை உழுதீர்கள்; தீவினையை அறுவடை செய்தீர்கள்; பொய்ம்மைக் கனியைத் தின்றீர்கள்; உங்கள் தேர்ப்படைகளின் மேலும், வீரர்களின் எண்ணிக்கையின் மேலும் நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள்.