Versions
TOV நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.
IRVTA நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கு ஏற்றபடி அறுப்பு அறுங்கள்; உங்களுடைய தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; யெகோவா வந்து உங்கள்மேல் நீதியைப் பொழியச்செய்யும்வரை, அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.
ERVTA நீ நன்மையை நட்டால் உண்மையான அன்பை அறுவடை செய்வாய். உன் நிலத்தை உழு. கர்த்தரோடு நீ அறுவடை செய்வாய். அவர் வருவார். அவர் உன் மீது நன்மையை மழைப்போன்று பொழியச் செய்வார்.
RCTA உங்களுக்கென நீதியை விதையுங்கள், அன்பை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள் மேல் நீதியைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடுங்காலம் நெருங்கிவிட்டது.
ECTA நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்; அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கிவந்துவிட்டது.