Bible Language

Joel 2:5 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினி ஜூவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைசல்போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும்.
IRVTA   அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சலைப்போலவும், வைக்கோலை எரிக்கிற நெருப்பு ஜூவாலையின் சத்தத்தைப்போலவும், போருக்கு ஆயத்தப்பட்ட பெரும் மக்கள்கூட்டத்தின் இரைச்சலைப்போலவும், மலைகளுடைய உச்சியின்மேல் குதிக்கும்.
ERVTA   அவைகளுக்குச் செவிகொடுங்கள். இது மலைகளின் மேல்வரும் இரதங்களின் ஒலி போல் உள்ளது. இது பதரை எரிக்கும் நெருப்பின் ஒலிபோல் உள்ளது. அவர்கள் வல்லமை வாய்ந்த ஜனங்கள். அவர்கள் போருக்குத் தயாராக இருக்கிறார்கள்.
RCTA   தேர்ப்படையின் கிறீச்சொலி போல் இரைந்து கொண்டு மலைகளின் உச்சிகள் மேல் தாவிச் செல்லும்; சருகுகளைச் சுட்டெரிக்கும் தீத்தழல் போல் இரைச்சல் செய்து, போருக்கு அணிவகுத்த வலிமை மிக்க சேனை போல முன்னேறும்.
ECTA   அவை தேர்ப்படைகளின் கிறீச்சொலிபோல் இரைந்து கொண்டு, சருகுகளைச் சுட்டெரிக்கும் நெருப்புத் தணல்போல் ஒலியெழுப்பி, போருக்கு அணிவகுத்த ஆற்றல் மிக்க படைகள்போல் மலையுச்சிகளின்மேல் குதித்துச் செல்லும்.