Bible Language

2 Samuel 15:25 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்.
IRVTA   ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; யெகோவாவுடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நான் அதையும் அவர் தங்கும் இடத்தையும் பார்ப்பதற்கு, என்னைத் திரும்ப வரச்செய்வார்.
ERVTA   தாவீது அரசன் சாதோக்கிடம், "தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குத் திரும்பவும் கொண்டு போ. கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டினால் என்னைத் திரும்பவும் வரவழைத்துக்கொள்வார். கர்த்தர் எருசலேமையும் அவருடைய ஆலயத்தையும் பார்ப்பதற்கு எனக்கு உதவுவார்.
RCTA   அப்போது அரசர் சாதோக்கைப் பார்த்து, "கடவுட் பேழையை நகருக்குத் திரும்பக் கொண்டு போங்கள். ஆண்டவருடைய கண்களில் எனக்குக் கருணை கிடைக்குமாகில், அவர் என்னைத் திரும்ப வரச் செய்து கடவுட் பேழையையும் கடவுள் வாழும் இடத்தையும் காணும் பேற்றை எனக்கு அளிப்பார்.
ECTA   அரசர் சாதோக்கை நோக்கி, கடவுளின் பேழையை நகருக்குத் திருப்பி எடுத்துச் செல். ஆண்டவரின் பார்வையில் எனக்கு கருணைக் கிடைத்தால், அவர் என்னை திருப்பிக் கொணர்ந்து அதனையும் அதன் உறைவிடத்தையும் நான் காணச் செய்வார்.