Bible Language

Leviticus 13:49 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
IRVTA   உடையிலாவது, தோலிலாவது, நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலினால் செய்த எந்தவித பொருளிலாவது பூசணம் பச்சையாகவோ சிவப்பாகவோ காணப்பட்டால் அது தொழுநோயாக இருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
ERVTA   அதில் பச்சை அல்லது சிவப்புப் புள்ளிகள் காணப்பட்டால் அதை ஆசாரியனுக்குக் காட்ட வேண்டும்.
RCTA   அப்படிப்பட்டவைகளில் வெள்ளை அல்லது செம்பட்டை நிறமுள்ள கறை தோன்றினால், அது தொழுநோயென்று கருதப்படவேண்டும். ஆதலால், அதனைக் குருவிடம் காண்பிக்க வேண்டும்.
ECTA   உடையிலோ, தோலாடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோல் அல்லது தோலினால் செய்யப்பட்ட எதிலாவது, நோய் பச்சை அல்லது சிவப்பு நிறமாகக் காணப்பட்டால், அது தொழுநோய். குருவுக்கு அதைக் காட்ட வேண்டும்.