Bible Language

Psalms 138:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
IRVTA   உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து,
உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்;
உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
ERVTA   தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன். நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மை யையும் துதிப்பேன். உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
RCTA   உமது புனித ஆலயத்தில் உம்மை ஆராதிப்பேன்; உமது இரக்கத்தையும் சொல்லுறுதியையும் நினைத்து, உமது திருப்பெயரைப் புகழ்வேன்; ஏனெனில் அனைத்திற்கும் மேலாக உமது திருப்பெயரையும் உம் வாக்குறுதியையும் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
ECTA   உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.