Bible Language

Revelation 2:20 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
IRVTA   ஆனாலும், உன்மேல் எனக்குக் குறை உண்டு; என்னவென்றால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் பெண், என்னுடைய ஊழியக்காரர்கள் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைச் சாப்பிடவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஏமாற்ற, நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.
ERVTA   எனினும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உள்ளன. ஏசபேல் என்னும் பெண்ணுக்குத் தனது விருப்பம்போல வாழ நீ இடம் கொடுக்கிறாய். அவள் தன்னைத் தீர்க்கதரிசி என்கிறாள். அவள் தன் உபதேசத்தால் என் மக்களை என்னைவிட்டுத் தூரமாக்குகின்றாள். அவளால் அவர்கள் பாலியல் பாவங்களைச் செய்கிறார்கள். மற்றும் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்கிறார்கள்.
RCTA   ஆனால் உன்மேல் நான் சொல்ல வேண்டிய குறையொன்று உண்டு: யேசபேல் போன்ற ஒருத்தியை நீ விட்டுவைத்திருக்கிறாய். இறைவாக்குரைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அவள், என் ஊழியர்களை ஏமாற்றி அவர்கள் விபசாரம் செய்யவும், சிலைகளுக்குப் படைத்ததை உண்ணவும் போதித்து வருகிறாள்.
ECTA   ஆயினும் உன்னிடம் நான் காணும் குறை ஒன்று உண்டு. இசபேல் என்னும் பெண்ணை நீ கண்டிக்காமல் விட்டு வைத்திருக்கிறாய். தான் ஒரு இறைவாக்கினள் எனக் கூறிக்கொள்ளும் அவள் என் பணியாளர்களை நெறி பிறழச் செய்து அவர்கள் பரத்தைமையில் ஈடுபடவும் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்ணவும் போதித்து வருகிறாள்.