Bible Language

1 Kings 13:3 (NLV) New Life Verson

Versions

TOV   அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோகும்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.
IRVTA   அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்த பலிபீடம் வெடித்து, அதின்மேல் உள்ள சாம்பல் கொட்டப்பட்டுப்போகும்; யெகோவா சொன்னதற்கு இதுவே அடையாளம் என்றான்.
ERVTA   இவையெல்லாம் நிகழும் என்பதற்கான சான்றையும் அந்த தேவமனிதன் காட்டினான். அவன், "இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்ன அத்தாட்சியாகும். கர்த்தர், ‘இந்த பலிபீடம் வெடித்து இதிலுள்ள சாம்பல் தரையிலேவிழும்’ என்று சொன்னார்" என்றான்.
RCTA   இது ஆண்டவரின் வாக்கு என்று அரசன் உணரும்படி, அன்றே அதற்கு ஓர் அடையாளம் காண்பித்து, "இதோ, இப்பலிபீடம் இடிய அதன் மேல் உள்ள சாம்பல் கீழே சிந்தும்" என்றார்.
ECTA   "பேசியுள்ளவர் ஆண்டவரே என்பதற்கு இதுவே அடையாளம்; இதோ! இப்பலிபீடம் இடிந்து விழும்; அதன் மீதுள்ள சாம்பல் கீழே கொட்டப்படும்" என்று கூறி ஓர் அடையாளத்தையும் அதே நாளில் தந்தார்.