Bible Language

Revelation 16:19 (NLV) New Life Verson

Versions

TOV   அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்குத் தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்குமுன்பாக நினைப்பூட்டப்பட்டது.
IRVTA   அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, யூதரல்லாதவர்களுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய கடுமையான கோபத்தின் தண்டனையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக ஞாபகப்படுத்தப்பட்டது.
ERVTA   மிகப் பெரிய அந்த நகரம் மூன்றாகப் பிளந்து போயிற்று. நாடுகளில் உள்ள நகரங்கள் அழிந்து போயின. தேவன் மகா நகரமாகிய பாபிலோனைத் தண்டிக்க மறக்கவில்லை. அந்த நகரத்துக்கு அவர் தனது கடுமையான கோபமாகிய மது நிறைந்த கோப்பையைக் கொடுத்தார்.
RCTA   அந்தப் பெருநகரம் மூன்று பாகங்களாகப் பிரிந்து போயிற்று; மாநிலத்தின் நகரங்கள் இடிந்து விழுந்தன. பாபிலோன் மாநகரையும் பழிவாங்கக் கடவுள் மறக்கவில்லை;
ECTA   அந்த மாநகர் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. மற்ற நாடுகளின் நகர்களும் வீழ்ந்தன. கடவுள் பாபிலோன் மாநகரை நினைவில் கொண்டு தம் கடும் சீற்றம் என்ற மது நிரம்பிய கிண்ணத்தை அதற்குக் குடிக்கக் கொடுத்தார்.