Bible Language

Genesis 42:37 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான்.
IRVTA   அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, “அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு மகன்களையும் கொன்றுபோடும்” என்று சொன்னான்.
ERVTA   அதற்கு ரூபன், "தந்தையே, நான் பென்யமீனை மீண்டும் உங்களிடம் அழைத்து வராவிட்டால் எனது இரண்டு மகன்களையும் கொன்றுவிடுங்கள். என்னை நம்புங்கள். நான் பென்யமீனைத் திரும்ப அழைத்துக் கொண்டு வருவேன்" என்றான்.
RCTA   அதற்கு ரூபன்: நான் அவனை உம்மிடம் திரும்பவும் கொண்டு வராதிருப்பேனாகில், என் இரு புதல்வர்களையும் கொன்று விடும். அவனை என் கையில் ஒப்புவியும்; நான் அவனை உமக்குத் திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பேன் என்றான்.
ECTA   அதற்கு ரூபன் தம் தந்தையிடம், "நான் அவனை உம்மிடம் திரும்பவும் கொண்டுவராவிடில், என் இரு மைந்தரையும் கொன்றுவிடுங்கள். அவனை என் கையில் ஒப்புவியுங்கள். நான் அவனை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்" என்றார்.