Versions
TOV அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.
IRVTA அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும்விட அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாக நேசிக்கிறதை அவனுடைய சகோதரர்கள் கண்டபோது, அவனோடு ஆதரவாகப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.
ERVTA யோசேப்பின் சகோதரர்கள், தங்கள் தந்தை தங்களைவிட யோசேப்பை அதிகமாக நேசிப்பதாக உணர்ந்தனர். இதனால் அவர்கள் அவனை வெறுத்தனர். எனவே அவர்கள் அவனோடு அன்பாகப் பேசுவதில்லை.
RCTA தங்கள் தந்தை அவனை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு, இவன் சகோதரர் இவனோடு ஒருபோதும் அன்பாய்ப் பேசாமல், இவனைப் பகைத்து வந்தனர். ஒரு நாள் சூசை தான் கண்ட ஒரு கனவைத் தன் சகோதரருக்குத் தெரிவித்தான். இதனால் (அவர்கள்) அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தனர்.
ECTA அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை.