Versions
TOV அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி, உன்னைவிட்டோடிப் போவான்.
IRVTA அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி, உன்னைவிட்டு ஓடிப் போவான்.
ERVTA உன்னைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைவார்கள். அவர்கள், ‘நினிவே அழிக்கப்படுகிறது. அவளுக்காக யார் அழுவார்கள்?’ என்பார்கள். நினிவே, என்னால் உன்னை ஆறுதல்படுத்தும் எவரையும் கண்டுபிடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும்."
RCTA உன்னை ஏறெடுத்துப் பார்ப்பவரெல்லாம் பின்வாங்கி, ' நினிவே பாழாய்ப் போய்விட்டது' என்று சொல்லுவார்கள்; உனக்காக இரங்குவோர் உண்டோ? உனக்கு ஆறுதல் சொல்வாரை எங்கே தேடுவோம்?
ECTA உன்னை நோக்குவோர் எல்லாரும் உன்னிடமிருந்து பின்வாங்கி, "நினிவே பாழாய்ப் போனது; அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ?" என்று சொல்வார்கள். உன்னை தேற்றுவோரை எங்கே தேடுவேன்?