Bible Versions
Bible Books

Zechariah 10:7 (ASV) American Standard Version

Versions

TOV   எப்பிராயீமர் பராக்கிரமரைப்போல இருப்பார்கள்; மதுபானத்தால் களிப்பதுபோல, அவர்களுடைய இருதயம் களிக்கும்; அவர்களுடைய பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழுவார்கள்; அவர்கள் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும்.
IRVTA   எப்பிராயீம் மக்கள் திறமையானவர்களைப்போல இருப்பார்கள்; மதுபானத்தால் களிப்பதுபோல, அவர்களுடைய இருதயம் களிக்கும்; அவர்களுடைய பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழுவார்கள்; அவர்கள் இருதயம் யெகோவாவுக்குள் களிகூரும்.
ERVTA   எப்பிராயீமின் ஜனங்கள் அளவுக்கு மீறி மதுபானம் குடித்த வீரர்களைப்போன்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களது குழந்தைகளும் கூட மகிழுவார்கள். அவர்கள் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியடையும்.
RCTA   அப்போது எப்பிராயீம் மக்கள் வீரரைப் போலாவர், மதுவருந்தியவர்கள் போல் அவர்கள் உள்ளம் மகிழும்; அவர்களுடைய பிள்ளைகள் கண்டு களிப்பார்கள், ஆண்டவரில் அவர்கள் உள்ளம் அக்களிக்கும்.
ECTA   எப்ராயிம் மக்கள் ஆற்றல்மிக்க வீரரைப்போலாவார்கள்; திராட்சை மது அருந்தியவரின் உள்ளத்தைப்போல் அவர்கள் உள்ளம் களிப்படையும்; அவர்கள் பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்; ஆண்டவரில் அவர்கள் இதயம் மகிழ்ந்து களிப்புறும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us