Versions
TOV மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.
IRVTA சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம்.
ERVTA உனக்குக் கிடைத்துள்ள வரத்தைப் பயன்படுத்த நினைவுகொள். மூப்பராகிய சபையோர் உன் மேல் கைகளை வைத்த போது தீர்க்கதரிசனத்தின் மூலம் இந்த வரத்தைப் பெற்றாய்.
RCTA மூப்பர் ஒன்றுகூடி உம்மீது கைகளை விரித்தபோது, இறைவாக்கினால் ஞானவரம் உமக்களிக்கப்பட்டது. உம்மில் இருக்கும் அவ்வரத்தைப் பற்றி அசட்டையாய் இராதீர்.
ECTA இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே.