Versions
TOV நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜூவாலை கடும் ஜூவாலையுமாயிருக்கிறது.
IRVTA நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும்,
உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்;
நேசம் மரணத்தைப்போல் வலிமையானது;
நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது;
அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது.
ERVTA என்னை உமதருகில் வைத்துக்கொள்ளும். உம் இதயத்தின்மேல் ஒரு முத்திரையைப்போல் கையில் அணிந்துகொள்ளும். நேசமானது மரணத்தைப்போன்று வலிமையானது. நேச ஆசையானது கல்லறையைப்போன்று வலிமையானது. அதன் பொறிகள் சுவாலை ஆகின்றன. பின் அது பெரிய நெருப்பாக வளர்கின்றது.
RCTA நீ என்னை உன் இதயத்தின் மேல் முத்திரையாகவும், கையிலே இலச்சினையாகவும் பொறித்து வை. ஏனெனில் காதல் சாவைப் போல் வலிமையுள்ளது, காதல் வைராக்கியம் பாதாளம் போல் கொடியது; அதன் சுடர்கள் நெரூப்புச் சுடர்கள் போலும்! அதன் கொழுந்து கொடிய தீக்கொழுந்தையொக்கும்!
ECTA உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல் என்னைப் பொறித்திடுக; இலச்சினைப்போல் உம் கையில் பதித்திடுக; ஆம், அன்பு சாவைப்போல் வலிமைமிக்கது; அன்பு வெறி பாதாளம்போல் பொறாதது; அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி; அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து.