Versions
TOV உன்னை அவர்களுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன் என்று பூர்வ நாட்களிலே அநேக வருஷகாலமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு, அந்நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
IRVTA உன்னை அவர்களுக்கு விரோதமாக வரச்செய்வேன் என்று ஆரம்ப நாட்களிலே அநேக வருடகாலமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என்னுடைய ஊழியக்காரர்களைக்கொண்டு, அந்த நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ERVTA எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: ‘அந்நேரத்தில், முன்பு நான் உன்னைப் பற்றி பேசினேன் என்பதை ஜனங்கள் நினைவுகொள்வார்கள். நான் எனது வேலையாட்களாகிய இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தினேன் என்பதை நினைவுகொள்வார்கள். இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் முன்பு எனக்காகப் பேசினார்கள் என்பதை அவர்கள் நினைவுகொள்வார்கள், அவர்களுக்கு எதிராகச் சண்டையிட நான் உங்களைக் கொண்டுவருவேன் என்று சொன்னார்கள்."
RCTA ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உன்னைக் குறித்துத் தான் நாம் பண்டைக்காலத்தில் நம் ஊழியர்களான, இஸ்ராயேலின் இறைவாக்கினர்கள் வாயிலாய்ப் பேசினோம்; அவர்கள் அந்நாட்களில் பல்லாண்டுகள் இறைவாக்குரைத்து, நாம் உன்னை அவர்களுக்கு எதிராகக் கொண்டு வருவோம் என்று முன்னுரைத்தார்கள்.
ECTA தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் முற்காலத்தில் என் ஊழியர்களாம் இஸ்ரயேல் இறைவாக்கினர் வழியாய் எவனைக் குறித்துப் பேசினேனோ அவன் நீதானே! அக்காலத்தில் அவர்கள் நான் உன்னை அவர்களுக்கு எதிராய்க் கூட்டி வருவேன் எனப் பல்லாண்டு இறைவாக்குரைத்தனர்.