Bible Versions
Bible Books

Amos 3:12 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையோ ஒரு காதின் துண்டையோ * ஒரு மிருகம் ஆட்டை கொன்று விட்டால், அதற்கு சாட்சியாக ஆட்டின் மீந்த உறுப்புகளை மந்தையின் சொந்தக்காரனுக்கு காட்டவேண்டும், அப்படி செய்யாவிட்டால் அந்த ஆட்டுக்காக நஷ்டத்தை அவன் செலுத்தவேண்டும். சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிப்பதைப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் மக்கள் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மெத்தையின் மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   கர்த்தர் கூறுகிறார், "ஒரு சிங்கம் ஒரு ஆட்டுக் குட்டியை தாக்கலாம். மேய்ப்பன் அந்த ஆட்டைக் காப்பாற்ற முயற்சி செய்யலாம். ஆனால் மேய்ப்பன் ஆட்டுக்குட்டியின் ஒரு பகுதியைத்தான் காப்பாற்றுவான். அவன் சிங்கத்தின் வாயிலிருந்து இரண்டு கால்கள் அல்லது காதின் ஒரு பகுதியை மட்டும் பிடுங்க முடியும். அவ்வாறே இஸ்ரவேலின் பெரும் பாலான ஜனங்கள் காப்பாற்றப்படமாட்டார்கள். சமாரியாவில் வாழ்கிற ஜனங்கள் படுக்கையின் ஒரு மூலையையோ அல்லது ஒரு மஞ்சத்தின் மேலிருக்கும் துணியின் ஒரு துண்டையோ காப்பாற்றிக்கொள்வார்கள்"
RCTA   ஆண்டவர் கூறுவது இதுவே: "சிங்கத்தின் வாயிலிருந்து இடையன் தன் ஆட்டின் இரண்டு கால்களையோ, காதின் ஒரு பகுதியையோ விடுவிப்பது போலவே, சமாரியாவில் பஞ்சணை மீதும் மெல்லிய படுக்கையின் மேலும் அமர்ந்திருக்கும் இஸ்ராயேல் மக்கள் விடுவிக்கப்படுவார்கள்."
ECTA   ஆண்டவர் கூறுவது இதுவே; "சிங்கத்தின் வாயிலிருந்து இடையன் தன் ஆட்டின் இரண்டு கால்களையோ காதின் ஒருபகுதியையோ பிடுங்கி எடுப்பது போல, சமாரியாவில் குடியிருந்து, பஞ்சணைகள்மீதும் மெத்தைகள்மீதும் சாய்ந்து இன்புறும் இஸ்ரயேல் மக்கள் விடுவிக்கப்படுவதும் இருக்கும்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us