Bible Versions
Bible Books

Hosea 2:7 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அவள் தன் நேசர்களைப் பின்தொடர்ந்தும் அவர்களைச் சேருவதில்லை, அவர்களைத் தேடியும் கண்டுபிடிப்பதில்லை; அப்பொழுது அவள்: நான் என் முந்தின புருஷனிடத்துக்குத் திரும்பிப்போவேன்; இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் அப்பொழுது எனக்கு நன்மையாயிருந்தது என்பாள்.
IRVTA   அவள் தன் நாயகர்களைப் பின்தொடர்ந்தும் அவர்களைச் சேருவதில்லை, அவர்களைத் தேடியும் கண்டுபிடிப்பதில்லை; அப்பொழுது அவள்: நான் என் முந்தின கணவனிடத்திற்குத் திரும்பிப்போவேன்; இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் அப்பொழுது எனக்கு நன்மையாயிருந்தது என்பாள்.
ERVTA   அவள் தனது நேசர்களின் பின்னால் ஓடுவாள். ஆனால் அவளால் அவர்களைப் பிடிக்க முடியாது. அவள் தன் நேசர்களுக்காகத் தேடிக்கொண்டிருப்பாள். ஆனால் அவளால் அவர்களைக் கண்டுக்கொள்ள முடியாது. பிறகு அவள், ‘நான் எனது முதல் கணவனிடம் (தேவன்) திரும்பிப்போவேன். நான் அவரோடு இருந்தபோது எனது வாழ்க்கை நன்றாக இருந்தது. இப்பொழுது இருக்கிறதை விட அன்று வாழ்க்கை நன்றாக இருந்தது" என்பாள்.
RCTA   தன் காதலர்களைத் தொடர்ந்து ஓடுவாள், ஆயினும் அவள் அவர்களிடம் போய்ச் சேர மாட்டாள்; அவர்களை அவள் தேடித்திரிவாள், ஆயினும் அவர்களைக் காணமாட்டாள்; அப்போது அவள், 'என் முதல் கணவனிடம் நான் திரும்பிப் போவேன்; இப்போது இருப்பதை விட அப்போது மகிழ்ச்சியாய் இருந்தேன்' என்று சொல்லுவாள்.
ECTA   அவள் தன் காதலர்களைப் பின்தொடர்ந்து ஓடுவாள்; ஆனால்; அவர்களிடம் போய்ச் சேரமாட்டாள். அவர்களைத் தேடித் திரிவாள்; ஆனால் அவர்களைக் காணமாட்டாள். அப்போது அவள், "என் முதல் கணவனிடமே நான் திரும்பிப் போவேன்; இப்போது இருப்பதைவிட, அப்போது எனக்கு நன்றாயிருந்தது" என்பாள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us