Versions
TOV மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன் என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்.
IRVTA மறுபடியும் யெகோவா சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன் என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்.
ERVTA மீண்டும் கர்த்தர், "சாமுவேலே!" என்று கூப்பிட்டார். மீண்டும் சாமுவேல் ஏலியிடம் ஓடிப் போனான். அவனிடம், "நான் இங்கே இருக்கிறேன். என்னை ஏன் கூப்பிட்டீர்கள்?" என்று கேட்டான். ஏலியோ, "நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ" என்றான்.
RCTA ஆண்டவர் மறுமுறையும் சாமுவேலைக் கூப்பிட்டார். சாமுவேல் எழுந்து ஏலியின் அருகே போய், "என்னைக் கூப்பிட்டீரே: இதோ, நிற்கிறேன்" என்றான். ஏலி, "மகனே, நான் உன்னை அழைக்கவில்லை; திரும்பிப்போய்த் தூங்கு" என்று பதிலுரைத்தார்.
ECTA ஆண்டவர் மீண்டும் "சாமுவேல்" என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா? என்று கேட்டான். அவரோ, நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்" என்றார்.